அடக்கி ஆளும் எண்ணம் இல்லை: மக்கள் நிராகரித்தால் வீடு செல்ல தயாராகவே உள்ளோம்

“மக்களை அடக்கி ஆண்டு ஆட்சியைத் தக்கவைக்கும் எண்ணம் எமக்கு இல்லை. மக்கள் எம்மை நிராகரித்தால், அந்த முடிவை ஏற்று வீடு திரும்புவதற்குத் தயாராகவே இருக்கின்றோம்” என்று அமைச்சர் லால்காந்த தெரிவித்தார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியன அடக்குமுறைச் சட்டங்களாகும் என்றும், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே அரசாங்கம் இவற்றைக் கொண்டுவருவதாகவும் எதிரணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி வருகின்றோம். எனவே, ஆட்சிக்கு வந்தபோது இருந்ததைவிட தற்போது மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. மேற்படி இரு சட்டமூலங்கள் தொடர்பில் தெளிவில்லாமலேயே சிலர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நாம் மக்களை அடக்கி ஆள முற்படமாட்டோம். அவ்வாறு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய தேவையும் எமக்கு இல்லை. தேர்தல் மூலம் மக்கள் எம்மை நிராகரித்தால், எந்நேரத்திலும் ஆட்சியிலிருந்து விலகி வீடு திரும்பத் தயாராகவே இருந்து நாம் சேவையாற்றி வருகின்றோம். எந்நாளும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை எமக்குக் கிடையாது. கடந்தகால ஆட்சியாளர்களிடம் அவ்வாறான எண்ணம் இருந்தது.

தொழிற்சங்கங்கள் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதை நாம் அறிவோம். நாமும் தொழிற்சங்கங்களில் இருந்தவர்கள்தான். எனவே, சிறுசிறு போராட்டங்கள் இடம்பெறலாம். எந்தவொரு போராட்டத்துக்கும் எதிராகவும் நாம் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டதில்லை” என்றார் லால்காந்த.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles