அடக்குமுறை தலைதூக்கினால் ஆட்சி கவிழும் – அபாய சங்கு ஊதினார் சாணக்கியன்

“கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக அரசு செயற்பட்டால் அதன் பிரதிபலனை வெகுவிரைவில் அது அனுபவிக்கும். மக்கள் போராட்டத்தை முடக்க அரசு முறையற்ற வகையில் செயற்படுகின்றது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவிக்கையில்,

“பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதைத் தவிர்த்து விட்டு அரசு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகளைப் பின்தொடர்ந்து செல்கின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதற்காக மக்கள் அபிப்பிராயத்தைக் கோரும் வகையில் காங்சேசன்துறை தொடக்கம் தங்காலை வரை கையெழுத்துச் சேகரிப்பு பயணத்தை மேற்கொண்டோம். அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை எம்மால் விளங்கிக்கொள்ள முடிந்தது.

நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மூன்று வேளை உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதற்குத் தீர்வு காண அரசு அவதானம் செலுத்தவில்லை.

மக்கள் போராட்டத்தை முடக்க அரசு முறையற்ற வகையில் செயற்படுகின்றது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை அரசு முறையற்ற வகையில் நெருக்கடிக்குள்ளாக்குகின்றது. வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களைத் தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள் எனக் குறிப்பிடுவது எந்தளவுக்கு நியாயம்?

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதன் உண்மைத்தன்மையை அரசு நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குமாறு பலமுறை வலியுறுத்துகின்றோம். 2019ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் முதலீடுகளைத் தடை செய்தார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்தத் தடையை நீக்கினார். அடுத்த ஜனாதிபதி எவ்வாறு செயற்படுவார் என்பதை எம்மால் குறிப்பிட முடியாது.

நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் அரசு செயற்பட்டால் இந்த அரசும் அதிக நாட்கள் பதவியில் இருக்க முடியாது” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles