” பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி Mohamed Bazoum ஐ மீண்டும் அப்பதவியில் அமர்த்துவதற்காக விடுக்கப்பட்டுவரும் அழுத்தங்களுக்கு அடிபணியபோவதில்லை.” – என்று நைஜர் இராணுவ ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார்.
அத்துடன், நைஜருக்கு எதிராக மேற்கு ஆபிரிக்க நாட்டு தலைவர்களால் விதிக்கப்பட்டுள்ள தடைகள் சட்டவிரோதமானவை எனவும், மனிதாபிமானவற்றவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டை காக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் எனவும் இராணுவ ஆட்சி தலைவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
நைஜரில் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு மேற்குலக நாடுகள் மட்டும் அல்ல சில மேற்கு ஆபிரிக்க நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துமாறும் வலியுறுத்திவருகின்றன.
நைஜருக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதுடன், அங்குள்ள தமது பிரஜைகளையும் மேற்குலக நாடுகள் வெளியேற்றிவருகின்றன.
இந்நிலையிலேயே இராணுவ ஆட்சி தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.