தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.
உள்ளாட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு நிதி அமைச்சு, நிதி வழங்காத நிலையில், தேர்தல் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. எனினும், தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
