அடுத்து என்ன? அவசரமாக கூடுகிறது முற்போக்கு கூட்டணி!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் உயர்பீடக் கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது.

பொதுத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் சிலர் பொதுத்தேர்தலில் மாற்று கட்சிகளில் இணைந்து போட்டியிட்டனர். இது உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்படவுள்ளது.

அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஐக்கிய மக்கள் சக்தி தேசியப்பட்டியல் வழங்காதபட்சத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

Related Articles

Latest Articles