ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று (19) கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தரப்பினரால் இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
தீர்க்கமான சில அரசியல் முடிவுகளை எடுக்கும் நோக்கிலேயே விசேட கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இக்கூட்டம் கட்சி யாப்புக்கு முரணானது என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.










