அடுத்து என்ன? சகாக்களுடன் மஹிந்த மந்திராலோசனை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

மஹிந்த ராஜபக்சவின் கொழும்பு இல்லத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

பொருளாதார நெருக்கடி, வரவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் போன்ற விடயங்களுக்குப் பொதுஜன பெரமுன எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்லும் வழிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்சவும் கலந்துகொண்டார்.

Related Articles

Latest Articles