ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை நடைபெற்றது.
இதில் மொட்டு கட்சியின் மாவட்ட தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர் எனவும், அரசின் எதிர்கால நகர்வுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
தேர்தல் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், அரசுக்கு ஆதரவு வழங்கும் பங்காளிக்கட்சி தலைவர்கள் சிலரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என தெரியவருகின்றது.
அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ளும் வகையிலேயே ஜனாதிபதி இந்த சந்திப்பை நடத்தியிருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.










