நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் முக்கியமான அரச அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது என நேற்று தகவல் வெளியானது.
எனினும், இது அமைச்சரவைக் கூட்டம் அல்ல என அமைச்சரவை பேச்சாளர் விளக்கமளித்திருந்தார். எனவே, விசேட கூட்டமாக இதனை கருதலாம்.

பால்மா, சமையல் எரிவாயு, கோதுமைமா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடி – தீர்மானம் எட்டப்படவுள்ளது.










