அடுத்து என்ன? 23 ஆம் திகதி முக்கிய சந்திப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10 மணிக்கு மேற்படி சந்திப்பை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் சம்பந்தமாகவே இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

Related Articles

Latest Articles