அடுத்த குறி மைத்திரியா? – நகர்வுகள் ஆரம்பம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளதென சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசை கடுமையாக விமர்சித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றிவரும் சூழ்நிலையிலேயே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இராஜினாமா செய்தாலும் அடுத்த சில வருடங்களுக்கு அரசு தொடரலாம் என அரச தரப்பில் மேற்கொண்ட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தாம் விரும்பிய எந்த தீர்மானத்தையும் எடுக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிரதான பொறுப்பு கூறும் நபராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles