அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? பொன்சேகா வெளியிட்டுள்ள அறிவிப்பு…

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கபோவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக ரணில் விக்கிரமசிங்க ஆதரவு கோரினால் வழங்குவீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பொன்சேகா இவ்வாறு கூறினார்.

” நாட்டை சிறப்பாக நிர்வகிப்பதற்கு தலைவர் இருக்கின்றார் .நான் கண்ணாடி முன் சென்றால் அந்த தலைவர் தெரிகின்றார்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles