அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கு சஜித் பிரேமதாசவே தகுதியுடையவர் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி நேற்று தெரிவித்தார்.
” டலஸ் அழகப்பெரும உட்பட எதிரணியில் உள்ள பலரும் கொள்கை அடிப்படையில் எதிர்காலத்தில் ஒன்றிணைவார்கள், அதற்கான சாத்தியம் உள்ளது. கூட்டணியொன்றை அமைப்பதே எமது இலக்கு.
தேர்தல் அறிவிக்கப்பட்டதும் சின்னம் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படும்.” – எனவும் சந்திர வீரக்கொடி குறிப்பிட்டார்.
