ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறித திசேரா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே அவர் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் மலரவுள்ள கூட்டணிக்கு தமது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.
புத்தளம், நாத்தான்டி தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் த சில்வா கடந்த முதலாம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










