அடுத்த பொதுவேட்பாளர் ஜி.எல்.பீரிஸா?

எதிரணிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அல்லர் என்று முன்னாள் அமைச்சர் சுனில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எதிரணிகளை பொதுவானதொரு மேடைக்கு கொண்டுவரும் முயற்சியே இடம்பெறுகின்றது. சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபுணராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இருக்கின்றார். அதனால் அவர் இதில் பங்கெடுத்துள்ளார். இம்முயற்சியின் தலைவரோ அல்லது அடுத்த ஜனாதிபதி வேட்பாளரோ அவர் அல்லர். இது தொடர்பில் அவருக்கு எவ்வித விருப்பமும் இல்லை.

தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். கொள்கையை ஏற்றதால்தான் ஆணை வழங்கினர். எனவே, பதவிகாலம்வரை அரசாங்கம் பயணிப்பதற்கு இடமளிக்க வேண்டும்.

எதிரணிகள், நிபுணர்களை உள்ளடக்கிய பொது மேடையையே நாம் அமைக்கின்றோம். ஆளுங்கட்சி மற்றும் எதிரணி என்பன இதில் பயன்பெறலாம்.” – என்றார் சுனில் பிரேமஜயந்த.

Related Articles

Latest Articles