பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் பெப்ரவரி மாதம் தன்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருவார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நேற்று முன்தினம் புளோரிடாவில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் வாஷிங்டனுக்கு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ட்ரம்ப், ‘ இந்திய பிரதமருடன் நான் நீண்ட நேரம் பேசினேன். அவர் அடுத்த மாதம், அநேகமாக பெப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருவார். இந்தியாவுடன் எங்களுக்கு மிகச் சிறந்த உறவு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.