அடுத்த வருடம் இரு தேர்தல்கள் – உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி! (Video)

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் அடுத்தவருடம் நிச்சயம் நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று , 2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (வரவுசெலவுத்திட்டம்) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த 122 எம்.பிக்களுக்கும் நன்றிகள். அவர்களின் ஒத்துழைப்பு தேவை. அத்துடன், எதிராக வாக்களித்த உறுப்பினர்களுக்கும் நன்றிகூற வேண்டும். ஏனெனில் எதிரணிக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

அடுத்த வருடம் ஜனாதிபதி, பொதுத்தேர்தல்கள் நடத்தப்படும். அதன்பின்னர் ஏனைய தேர்தல்கள் நடத்தப்படும். தேர்தல்களை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை.” – எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles