நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்துவரும் கடும் மழை காரணமாக விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் மழை காரணமாக ஆறுகள் ஓடைகள்,பெருக்கெடுத்துள்ளன. இதனால் பல மரக்கறி நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தையில் மரக்கறிகள் குறைவடைந்துள்ளதுடன் விலைகளும் அதிகரித்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் கந்தபளை, டயகம, அக்கரபத்தனை, லிந்துலை பொகவந்தலாவை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளன. விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரக்கறி வகைகள் வெள்ளத்தால் அல்லுண்டு சென்றுள்ளன. இதனால் விவசாய குடும்பங்கள் மற்றும் பாவனையாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
