அடை மழையால் யாழில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 2 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் இதுவரை 288 குடும்பங்களைச் சேர்ந்த 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 215 குடும்பங்களைச் சேர்ந்த 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி, மின்னல் தாக்கத்தால் 29 குடும்பங்களைச் சேர்ந்த 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 574 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 341 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முழுமையாகவும், ஒரு வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 508 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 266 குடும்பங்களைச் சேர்ந்த 932 பேர் பல அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 520 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 4 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles