அட்டனில் வீதிகளில் டயர்களை எரித்து போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் அட்டன் நகரில் இன்று காலை வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.

அட்டன் நகரில் டெலிகோம் முன்பாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. பயணிகள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியிருந்தனர்.

டயர்களை வீதிகளில் எரித்து, தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அட்டன் நகரிலுள்ள பல வர்த்தகர்கள் கடைகளை மூடி தமது ஆதரவை வழங்கினர்.

Related Articles

Latest Articles