அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா உடன் பேச்சு நடத்த மாட்டோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அடுத்த வாரம் ஈரான் உடன் பேச்சு நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஈரான் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர்,
‘ அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அடுத்த வாரம் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.” – என்று அறிவித்தார்.
அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா? இதனால் ஈரானுக்கு ஏதும் பலன் கிடைக்குமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அணுசக்தி நிலையங்கள் சேதம் அடைந்துள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுத திறனை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.