அண்ணாத்த படத்தின் கதை ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் அது உண்மையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தினை பற்றி ஒரு சிறிய செய்தி என்றாலும் அது மிகப் பெரிய அளவில் பேசப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே அவர் அடுத்தடுத்த திரைப்படம் மற்றும் அவரது சொந்த வாழ்க்கை பற்றி அதிக அளவு செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.
அவர் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு காரில் சென்றது உள்ளிட்ட சில விஷயங்கள் பற்றி அதிகம் செய்திகள் வந்தது. அவர் இ பாஸ் வாங்கிக்கொண்டு தான் அங்கு சென்றாரா என்பது பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பிறகு அவர் முறைப்படி இ பாஸ் வாங்கிய பிறகு தான் சென்றார் என அவர்கள் விளக்கம் கூறப்பட்டது.
மேலும் ரஜினி தற்போது கவனம் செலுத்தி வரும் அண்ணாத்த படத்தினை பற்றியும் சில தகவல்கள் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த படம் ட்ராப் ஆகி விட்டது என்று கூட செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து அது உண்மை இல்லை என தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் கதை லீக் ஆகிவிட்டது என கூறி ஒரு செய்தியும் உலா வருகிறது. ஆனால் அது உண்மையா என்பது கேள்விக்குறிதான். ரஜினியின் கதாபாத்திரத்திற்கு முறைப்பெண்களாக குஷ்பு மற்றும் மீனா இருக்கும் நடிக்கிரகில் என்றும், அவர்களுக்கு நடுவில் ரஜினியை யார் திருமணம் செய்து கொள்வது என போட்டி இருக்கும் எனவும், அதனால் அவர்களில் ஒருவரை திருமணம் செய்தால் மற்றொருவருக்கு ஏமாற்றம் ஏற்படும் என்று வேறொரு பெண்ணை ரஜினி திருமணம் செய்து கொள்வாராம். அதன் பிறகு ரஜினிக்கு மகளாக வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
அதன் பிறகு கீர்த்தி சுரேஷையாவது மருமகள் ஆக்கி கொள்ளலாம் என குஷ்பு, மீனா இருவரும் போட்டி போடுவார்களாம். அதில் ஆவது அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா என்பது தான் மீதி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படி ஒரு கதை இணையத்தில் உலா வருகிறது.
இந்த படத்தில் பிரகாஷ் ராஜும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார். சூரி, சதிஷ் உள்ளிட்டவர்கள் காமெடியன்களாக நடித்து இருக்கிறார்கள். மேலும் சிறுத்தை சிவா இயக்கும் படங்கள் அனைத்திலும் செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் என்பதால் அண்ணாத்த படத்திலும் குடும்ப ரசிகர்களை அதிகம் கவரும் விதத்தில் தான் கதை இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் கொரோனா பிரச்சனை காரணமாக அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் அது மீண்டும் துவங்க அடுத்த வருடம் கூட ஆகலாம் என கூறப்படுகிறது. காரணம் கொரோனா வைரஸ் அதிகம் பரவுவதால் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஷூட்டிங் தற்போதைக்கு துவங்க வேண்டாம் என்கிற முடிவை அவர் எடுத்திருக்கிறாராம். படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் கொரோனா பரவல் நின்ற பிறகு தான் ஷூட்டிங்கை துவங்குவது என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது.
அதனால் அடுத்த வருடம் பொங்கலுக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் இரண்டாவது முறையாக அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில், அதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
நன்றி சமயம் தமிழ்.கொம்