அதிகரிக்கும் மரக்கறிகளின் விலைகள்

நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்திலும் , மத்திய பொருளாதார சந்தையிலும்  மரக்கறிகளின் விலைகள் கடந்த சில நாட்களை விட மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலின் பிரகாரம், ஒரு கிலோ கோவா 250 – 280 ரூபாய்கும் ஒரு கிலோ கரட் 240 – 250  ரூபாய்க்கும் லீக்ஸ் 250 – 260  ரூபாய், உருளைக்கிழங்கு 270  ரூபாய்,  பீட்ரூட் 320 ரூபாய், தக்காளி 450 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகின்றன.

புரோக்கோலி 1200 – 1300 ரூபாய்க்கும் ஒரு  கிலோ கோலிபிளவர் 600 – 650 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் அத்தோடு நாட்டு மரக்கறிகளின் விலையும் அதிகரித்த வண்ணம் காணப்படுவதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.                                                                                                                                                                                                                        தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்குமாயின் மேலும் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்தாலும், மலையகத்தில் உருளைக்கிழங்கு விலை கடுமையாக குறைந்துள்ளது, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து இந்த நாட்டிற்கு உருளைக்கிழங்கு கொண்டு வரப்படுவதே காரணம் என தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles