அதிகரித்தது ‘பிளேன் ரீ’யின் விலை

ஏராளமான உணவகங்கள் சாதாரண தேநீரின் விலையை 60 ரூபாவாக உயர்த்தியுள்ளன.

சீனி மற்றும் எரிவாய விலை உயர்வால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் 30 ரூபாவுக்கு விற்பனையானமை குறிப்பிடத்தக்கது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வால் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles