கேக் ஒரு கிலோ கிராம் ஆயிரம் ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக ஏனைய தொழிற் துறைகளைப் போன்று பேக்கரி தொழிற் துறையும் பாதிப்படைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.