அதிகாரப்பகிர்வு அவசியம் – பிள்ளையான் வலியுறுத்து

மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு அதிகாரப்பகிர்வு இடம்பெற வேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தியுள்ளார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான ‘பிள்ளையான்’ எனப்படுகின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன்.

” இலங்கைக்குள் தமிழ் மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய நிலைமையை உருவாக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு சிங்கள மக்களுக்கு இருக்கின்றது. சிங்கள மக்கள் என்பது அம்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களிடம் இருக்கின்றது.

எனவே, இது விடயத்தில் இனியும் கால நீடிப்பு செய்வதென்பது நம்பிக்கையீனங்களை ஏற்படுத்தும், 13 ஆவது திருத்தச்சட்டம் விரைவாக அமுலாக்கப்பட வேண்டும். அதில் இன்னமும் தடையாக உள்ள பிரச்சினைகள் சீர்செய்யப்பட வேண்டும்.

சர்வதேச விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, எதிரணி கோருவதுபோல சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு, அசாத் மொஸலானவை கொண்டுவந்து விசாரணை நடத்தட்டும், நானும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles