அதிகாரப் பகிர்வு அவசியம்! தேசிய மக்கள் சக்தி இடித்துரைப்பு!!

” ஜனநாயகம் வலுவடைய வேண்டுமெனில் அதிகாரப்பகிர்வு என்பது அவசியம். அவ்வாறு ஜனநாயகம் வலுவடையும்போது தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வுகாண வழிபிறக்கும்.” என்று ஆலோசனை வழங்கியுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஹரினி அமரசூரிய.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை, எனவே, புதியதொரு அரசமைப்பின் ஊடாக அதற்கான விடை தேடப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

” மக்களுக்கு அதிகாரங்களை வழங்குவதே ஜனநாயகமாகும். அந்த அதிகாரம் என்பது வாக்குரிமையாக மட்டும் இருக்ககூடாது. அதேபோல அதிகாரப்பகிர்வினமூலம் ஜனநாயகம் மேம்படும். அந்தவகையில் அதிகாரப்பகிர்வு கொள்கையை தேசிய மக்கள் சக்தி ஆதரிக்கும்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வெனக் கூறப்பட்டாலும் அவ்வாறு தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. 13 முன்வைக்கப்பட்ட பின்னரே போர் உக்கிரமடைந்தது.

எனவே, அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை கிடைக்கும் வகையில், அனைவரும் சம அந்தஸ்த்துடைய பிரஜைகளாக வாழும் வகையில் தீர்வு பொறிமுறை அவசியம். அதற்கேற்ற வகையில் புதிய அரசமைப்பொன்று அவசியம். இதனை இதயசுத்தியுடன் செய்யக்கூடிய அரசொன்றும் அவசியம்.” – எனவும் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles