ஹாலி எல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போஹாமலித்த பகுதிகளில் அதிக விலைக்கு எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள், மற்றும் ஹாலி எல பொலிஸார் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையில் இவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 18 எரிவாயு சிலிண்டர்கள் கைபற்றியதாக ஹாலி எல பொலிஸ் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை பதுளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை ஹாலி எல பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
