நாட்டில் தற்பொழுது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தண்ணீர் பாவனையும் அதிகரித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தொடர்பாடல் முகாமையாளர் சரத்சந்திர முதுபண்டா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொழும்பு, கம்பஹா, குருணாகல், புத்தளம், அநுராதபுரம், திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அதிக வெப்பநிலை பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக
வெப்பநிலை காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறும், அதிக நீரைபருகுமாறும், வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
