” அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தம்மால் முடிந்த தீர்வை அரசாங்கம் வழங்கியுள்ளது. இதற்காக மாதாந்தம் மேலதிகமாக 32 பில்லியன் ரூபாவை செலவிடவேண்டியுள்ளது. எனவே, மாணவர்களுக்கான ‘ஒன்லைன்’ கற்பித்தலை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.”
இவ்வாறு அதிபர் மற்றும ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் மஹிந்த அமரவீர.
அரசாங்க வருமானத்தில் 85 வீதம் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுக்கு பயன்படுத்தப்படுகின்றது. தற்போது கடும் நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. எனினும், அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
‘சுபோதினி’ அறிக்கை என்பது முழுமையானதொன்றல்ல, அதிலுள்ள நல்ல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.