‘அதிபர் – ஆசிரியர்களுக்கு பட்ஜட்டில்தான் நிரந்தர தீர்வு – அதுவரை 5000 ரூபா கொடுப்பனவு’

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலேயே நிரந்தரத் தீர்வு வழங்கப்படும். அதுவரையில் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும். டிசம்பர் இறுதியில் அது நிறைவேற்றப்படும்.

அந்தவகையில் சுமார் இரு மாதங்களுக்கே அதிபர், ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவையில் நேற்று முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கும் வரை, அவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த 5000 ரூபா கொடுப்பனவை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு வழங்க, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த நிலையில், மாணவர்களுக்கு இணைய வழியிலான கல்வியை மீள ஆரம்பிக்குமாறு, ஆசிரியர்களிடம் அமைச்சரவை கோர எதிர்பார்த்துள்ளது.

Related Articles

Latest Articles