அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு: வரிசையில் காத்திருக்க வேண்டாம்: லிட்ரோ

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதால், வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது.

நேற்று முன்தினம் தரையிறக்கப்பட்ட எரிவாயு தகனசாலை, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படும்.

குறித்த கையிருப்புக்கள் தீர்ந்த பின்னர் இதுவரை புதிய எரிவாயு கொள்வனவுக்கான உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை. அடுத்த எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைய குறைந்தது இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles