அத்தியாவசிய பொருட்களின் விலை அசுர வேகத்தில் உயர்வு

மாத்தளை மற்றும் தம்புள்ளை நகரங்கள் உட்பட சூழவுள்ள சகல உப நகரங்களிலும் கோழி இறைச்சி மற்றும் தேங்காய் எண்ணெய் என்பவற்றின் விலை கிலோ 1,100 தொடக்கம் 1,300 வரை விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இரு பெரு நகரங்கள் உட்பட சூழவுள்ள சகல உப நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளும் ஒரு டீ இன் விலை 100 ரூபாவாகவும் ஒரு பிளேன்டீயின் விலை 50 தொடக்கம் 60 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இம்மாவட்டத்தில் ச​ைமயல் எரிவாயுகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரிதும் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் வேளை, சமையல் எரிவாயுக்கு பகரமாக மண்ணெண்ணெய் அடுப்புகளை கொள்வனவு செய்த மக்கள் இப்பொழுது மண்ணெண்ணெய்யும் இல்லாத நிலையில் பெரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகபொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எரிவாயு விநியோகிக்கும் நிலைங்களில் வாகனங்களுக்கான டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள வேண்டியதற்காக வாகனங்கள் மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரவு பகலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

விசேடமாக அரசாங்கத்தின் டொலர் இல்லாமை காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அசுர வேகத்தில் ஆகாயத்தை நோக்கி செல்லும் போது, அரசாங்கத்தின் இயலாமையை சாதகமாக பயன்படுத்திகொள்ளும் சிலர் சுயநல எண்ணம் கொண்ட சில வர்த்தகர்கள், அரசாங்கத்தின் விலையை மீறி தான் தோன்றித்தனமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்வதாகவும், இதனை கட்டுப்படுத்த நுகர்வோர் அதிகார சபை இம்மாவட்டத்தில் செயல் இழந்து இருப்பதால் வர்த்தகர்கள் தன்னிச்சையாக செயற்பட்டு பொருட்களின் விலைகளை தாங்கள் நினைத்தவாறு விலை அதிகரித்து விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles