‘அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை’

சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவவில்லை என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல தெரிவித்தார்.

சில அத்தியாவசிய பொருட்களுக்கு இன்று அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதிகபட்ச சில்லறை விலை பட்டியலுக்கு அனுமதியைப் பெற அவற்றை சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் செனரத் நிவுன்ஹெல்ல கூறினார்.

சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதற்கு குறிப்பிட்ட தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்

Related Articles

Latest Articles