இந்திய அரசின் அழைப்பையேற்று டில்லி சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருடன் இன்று பேச்சு நடத்தினர்.
இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் இந்தியா சென்றுள்ளனர்.