அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதை முன்னிட்டு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி வெற்றியை கொண்டாடினார்கள்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் காரியாலயத்தில் இன்று காலை பொங்கல் பொங்கி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றியை ஆதரவாளர்கள் கொண்டாடினார்கள்.
இதன்போது கட்சி ஆதரவாளர்களால் பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.










