அனைத்து வலயங்களுக்கும் நாளை மின்வெட்டு

அனைத்து வலயங்களுக்கும் நாளை (1) சுழற்சி முறையில்   3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியினுள் இந்த மின்வெட்டு அமுலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினுள், அதிக மின் கேள்வி நிலவும் இரவு வேளைகளில், தேவை ஏற்படின் திட்டமிடப்படாத 30 நிமிட மின்துண்டிப்பு அமுலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின் நுகர்வை குறைத்து சிக்கனம் பேணுமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles