பொதுத்தேர்தலின்போது கடும் சொற்சமரில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ஒன்றாக கலந்துகொண்டனர்.
அத்துடன் இருவரும் அருகருகே அமர்ந்து மனம் விட்டு பேசினர்.
மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்துவந்த ரொஷான் ரணசிங்க, பொதுத்தேர்தலில் மக்கள் அவரை நிராகரிக்க வேண்டும் எனவும் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார். ஆனால் மாவட்டத்தில் மைத்திரிதான் முதலிடம் பிடித்தார்.
இந்நிலையிலேயே இருவரும் இன்று ஒன்றாக நிகழ்வில் பங்கேற்றனர். மைத்திரிபால சிறிசேனவை ‘சேர்’ என விளித்தே ரொஷான் ரணசிங்க உரையாற்றினார். மைத்திரியுடன் இணைந்து பொலன்னறுவையில் அபிவிருத்தியை முன்னெடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.