அபிவிருத்தி பணிகளை கண்காணிப்பதற்கு இணைப்பாளர்கள் நியமனம்

நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச வாரியாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை கண்காணித்து அவற்றை விரைவு படுத்துவதற்கான பணிகளுக்கு புதிய இணைப்பாளர்களை மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே நியமித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாகவும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே தலைலையில் மத்திய மாகாண ஆலுனர் காரியாலயத்தில் ஜூலை முதலாம் திகதி இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்ற சபைகளின் ஊடாக கொண்டு செல்லப்படுகின்ற சகல அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேலும் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காகவே முன்னாள் தவிசாளர்கள் உள்ளடங்களாக இந்த விஷேட நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில்ஹட்டன்-டிக்கோயா நகர சபைக்கு தயாளன் குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல நுவரெலியா மாநகர சபைக்கு முன்னால் தலைவர் சந்தனலால் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் நுவரெலியா பிரதேசத்திற்கு சபைக்கு வேலு யோகராஜ் கொட்டகலை பிரதேசத்திற்கு ராஜமனி பிரசாந்த்,மஸ்கெலியா பிரதேசத்திற்கு கோவிந்தன் சென்பகவள்ளி, நோர்வூட் பிரதேசத்திற்கு ரவி குழந்தைவேல்,அக்கரபத்தனை பிரதேசத்துக்கு எஸ்.சச்சிதானந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆ.ரமேஸ்.

Related Articles

Latest Articles