” அப்பாவிகளின் வீட்டை உடைக்கும் காடையர்கள்” – மனோ கடும் சீற்றம்! பெருந்தோட்ட அமைச்சரிடமும் முறையீடு

இரத்தினபுரி வெள்ளந்துர தோட்டத்தில் அரங்கேறியுள்ள சம்பவம் தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்.

இது தொடர்பில் அவரின் முகநூல் பதிவு வருமாறு,

” பொலிஸ்காரர்களை போலவும், நீதிமன்ற கட்டளை இருப்பதாகவும் நடித்து அப்பாவிகளின் வீட்டை உடைக்கும் காடையர்கள் இவர்கள் என சற்றுமுன் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணவிடம் சொன்னேன்.

ஒவ்வொருமுறையும் பதில் கூறுகிறீர்கள், அல்லது ஒரு அரசாங்க அரசியல்வாதியை அங்கே அனுப்பி அதன் பின் ஒளிந்து கொள்கிறீர்கள். இதற்கு தீர்வுதான் என்ன? என்று மேலும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரணரிடம் கேட்டேன்.

இந்த கம்பனிகாரர்களுடன் பணியாற்ற முடியவில்லை. ஜனாதிபதியிடம் பேசி முழுமையான தீர்வை தேடுவோம் என ரமேஷ் பத்திரண பதிலளித்தார்.

Related Articles

Latest Articles