இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகரும் இந்திய வம்சாவளி மக்களின் தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 22 வது சிரார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது பழைய பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் மலர் கொத்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்.

கொழும்பு சௌமிய பவனில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்தனர்.
