அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது: ஐ.நா. கவலை!

ஈரான்மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஆபத்தானது என ஐ.நா., பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து, அன்டானியோ குட்டரெஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘அமெரிக்காவின் தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் ஆபத்தான நடவடிக்கை. இந்த மோதல் எல்லையை மீறி செல்கிறது. இந்த தாக்குதல் மக்களுக்கும், உலகிற்கும் பேரழிவை ஏற்படுத்தும்.

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்த ஆபத்தான நேரத்தில், குழப்பமான சூழலைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். ராணுவ நடவடிக்கை தீர்வு கிடையாது. ஒரே பாதை ராஜதந்திரம் தான். ஒரே நம்பிக்கை அமைதி தான.” – என ஐ.நா. செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles