அமெரிக்காவில் இருந்து பஸில் வியூகம் வகுப்பு! நாடு திரும்பியதும் அதிரடி……..!

அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை மையப்படுத்தியதாகவே இச்சந்திப்பு நடைபெறவுள்ளது எனவும், தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகுமாறு தொகுதி அமைப்பாளர்களுக்கு இதன்போது ஆலோசனை வழங்கப்படவுள்ளது.

அத்துடன், தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து சிலர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர் எனவும் கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து செயற்படும் பங்காளிக்கட்சி தலைவர்களுடனும் கூட்டணி நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

Related Articles

Latest Articles