” வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதன் மூலம் பொருளாதார புரட்சி நடக்கிறது. இதில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை ஜனாதிபதி டிரம்ப் அதிகரித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத வரி விதிக்கப் போவதாக சீனா கூறியுள்ளது. இதனால் உலக பொருளாதாரத்திற்கு சிக்கல் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ அமெரிக்காவை விட சீனா கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சீனா மற்றும் பல நாடுகள் நம்மை நிலைநிறுத்த முடியாத அளவிற்கு நடத்தின. நாம் ஊமையான மற்றும் உதவியற்ற வகையில் இருந்தோம். இனிமேல் அப்படி இருக்காது. முன் எப்போதும் இல்லாத வகையில் வேலைவாய்ப்புகள் மற்றும் வர்த்தகத்தை மீண்டும் கொண்டு வருகிறோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல முன்எப்போதும் இல்லாத வகையில் முதலீடு குவிந்து வருகிறது. நிச்சயம்,இது ஒரு பொருளாதார புரட்சி. இதில் நிச்சயம் வெற்றி பெறுவோம். இது எளிதான விஷயம் அல்ல. ஆனால், அதன் பலன் வரலாற்று ரீதியில் சிறப்பானதாக இருக்கும். மீண்டும் அமெரிக்காவை சிறப்பானதாக மாற்றுவோம்.” – எனவும் ட்ரம்பால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.