அமெரிக்காவில் 22 பேரை சுட்டுக் கொன்ற நபர் சடலமாக மீட்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் துப்பாக்குச்சூடு நடத்திய ராபர்ட் கார்டு என்ற சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் அடிக்கடி, துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு லீவிஸ்டன் நகரில் உணவகம் மற்றும் கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களை சுற்றிவளைத்த பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணையைத் தொடங்கினர். இதில், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 40 வயதான ராபர்ட் கார்டு என்பது அடையாளம் காணப்பட்டது.

சந்தேக நபராக அறிவிக்கப்பட்ட அவர் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன. அப்போது, குடும்ப வன்முறைக்காக சில மாதங்களுக்கு முன்பு அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் அவர் மனநல மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்தது. முன்னாள் ராணுவ வீரரான ராபர்ட் கார்டு, துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரான ராபர்ட் கார்டு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லூயிஸ்டனில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள லிஸ்பன் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள ஆண்ட்ரோஸ்கோகின் ஆற்றின் அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

மைனே துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பிறகு தன்னைத் தானே அவர் சுட்டுக் கொண்டு இறந்து விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து ராபர்ட் கார்டினால் இனி யாருக்கும் அச்சுறுத்தல் இல்லை என்பதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன் என்று மைனே ஆளுநர் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles