” அரச ஊழியர்களின் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் முகநூலில் கருத்து தெரிவிப்பதற்குகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம்வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” தேசிய சமத்துவம் இன்றி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிடுகின்றார். அது முற்றிலும் உண்மை. நானும் ஏற்கின்றேன்.
ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி அல்லா கடவுள் என விமர்சித்த தேரரை, ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி செய்வதால் சமத்துவம் ஏற்பட்டுவிடுமா?
அதேவேளை, அரச ஊழியர்களுக்கு கருத்து தெரிவிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அரசை விமர்சித்தால் தடை விதிக்கப்படுமாம்.
உலகில் சர்வாதிகளாகக் கருதப்பட்ட சதாம், கடாபி போன்றவர்கள் பலம்பொருந்திய நாடான அமெரிக்காவுடன்தான் மோதினர். ஆனால் நமது சேர், ஆசிரியர்களுடன், விவசாயிகளுடன், அரச ஊழியர்களுடன் மோதுகின்றார்.” – என்றார்.
