முக்கிய இரு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.
அமெரிக்கா, நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்த அமர்வு மற்றும் கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள ஜி – 77 மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொள்கின்றார்.
முதலில் கியூபாவின் ஹவானா செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜி77 மாநாட்டில் பங்கேற்பார்.
ஜி77 உச்சி மாநாடு என்பது பொருளாதார ரீதியாக வளரும் 134 நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகும். அவ்வமைப்பில் இலங்கையும் அங்கம் வகிக்கின்றது.
இம்மாநாடு முடிவடைந்த பின்னர் நியூயோர்க் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்த அமர்வில் பங்கேற்கவுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்த அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.










