அமெரிக்கா பறந்த பஸில் விரைவில் நாடு திரும்புவார்

அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவாரென்று அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” அரசியல் வாதிகளும் மனிதர்களே, அவர்களுக்கும் தேவைகள் இருக்கும். சிலர் மருத்துவ தேவைக்காக வெளிநாடு செல்லலாம். காணி பிரச்சினை இருக்கும், பிள்ளைகளின் பிரச்சினை இருக்கும். இப்படி தனிப்பட்ட வாழ்வில் பல பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றை தீக்க வேண்டும்.

எனவே, அரசியல்வாதிகளின் வெளிநாட்டு பயணங்களை , சுற்றுலா என கருதிமட்டும் விமர்சிக்க வேண்டாம். சாதாரண மனிதர்களுக்காக அவர்களுக்கும் தேவைகள் இருக்கக்கூடும்.

அவ்வாறானதொரு தேவைக்காக நிதி அமைச்சர் அமெரிக்கா சென்றிருக்கலாம். அவர் விரைவில் நாடு திரும்புவார்.” – என்றார்.

Related Articles

Latest Articles