அமெரிக்க அணி அபார வெற்றி

9ஆவது டி20 உலகக்கிண்ண தொடர் இன்று ஆரம்பமான நிலையில், முதல் போட்டியில் அமெரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாலத்தில் கனடாவை வீழ்த்தியுள்ளது.

9ஆவது டி20 உலகக்கோப்பை தொடரை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இன்று தொடங்கியது. தொடக்க போட்டியில் அமெரிக்கா – கனடா அணிகள் மோதின.நாணயச்சுழற்சியில் வென்ற அமெரிக்கா அணியின் தலைவர் மோனக் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நவ்னீத் தலிவால் 61 ரன்களும், நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்களும் குவித்தனர்.

இதனையடுத்து 195 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன ஸ்டீவன் டெய்லர் இன்னிங்சின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மோனங்க் படேல் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கை கோர்த்த அண்ட்ரீஸ் கவுஸ் – ஆரோன் ஜோன்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடி அமெரிக்க அணியை வெற்றி பெற வைத்தது. வெறும் 17.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த அமெரிக்கா 197 ஓட்டங்கள் அடித்து அபார வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.

Related Articles

Latest Articles