அமெரிக்க பறக்க சென்ற பஸில் விமான நிலையத்திலிருந்து விரட்டியடிப்பு

முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று அதிகாலை அமெரிக்கா பறப்பதற்கு முற்பட்டுள்ளார்.

இதற்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அவர் இன்று அதிகாலை சென்றிருந்தார்.

பிரபுக்களுக்கான பிரிவு ஊடாக அவர் உள்நுழைந்துள்ளார்.

அவருக்கு விமான நிலையத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விமான நிலைய அதிகாரிகள் சிலர் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனால் பஸில் ராஜபக்ச திரும்பி வந்துள்ளார்.

Related Articles

Latest Articles